விவசாயிகளுக்கு உகந்த பட்ஜெட்டால் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி உறுதி: பாஜக கூட்டணி நம்பிக்கை

விவசாயிகளுக்கு உகந்த பட்ஜெட்டால் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி உறுதி: பாஜக கூட்டணி நம்பிக்கை
Updated on
1 min read

மத்திய பட்ஜெட்டில் கிராமங்கள் மற்றும் விவசாயிகள் நலனுக் காக முன்வைக்கப்பட்ட அறிவிப்பு கள் எதிர்வரும் பல மாநில சட்டப் பேரவை தேர்தல்களில் வெற்றியை ஈட்டித் தரும் என தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக் கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பொது பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட் டது. இந்நிலையில் பாஜகவின் எம்பிக்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உட்பட அமைச்சர்கள், எம்பிக்கள், கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின்போது மக்களவையில் தாக்கல் செய்யப் பட்ட மத்திய பட்ஜெட் குறித்து விரி வாக விவாதிக்கப்பட்டது. அப் போது கூட்டணி கட்சி உறுப்பினர் களும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்து பேசினர். கிராமங்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டால், எதிர்வரும் பல மாநில சட்டப்பேரவை தேர்தல் களில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றியை ஈட்டும் என உறுப்பினர் கள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ‘‘மத்திய பட்ஜெட் எம்பிக்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த பட்ஜெட் கிராமங்கள், விவ சாயிகள் மற்றும் இளைஞர் களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் என தெரிவித்தனர். விவசாயி களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த துறையும் வளர்ச்சி பெறும்.

இந்தியா விவசாய நாடு. அதை கருத்தில் கொண்டு முழு பட்ஜெட்டும் வேளாண் துறைக் காக அர்ப்பணிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இந்த பட்ஜெட் தான் ‘வாழ்க விவசாயி கள்’ என்ற கோஷத்துக்கு அர்த்தம் சேர்த்துள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in