Published : 19 Nov 2021 03:08 AM
Last Updated : 19 Nov 2021 03:08 AM

காஷ்மீரில் காங்கிரசுக்கு பின்னடைவு: குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமான மூத்த தலைவர்கள் 20 பேர் ராஜினாமா

ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவரை மாற்ற கோரி குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமான கட்சியின் 20 மூத்த தலைவர்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ.மிர் செயல் பாடுகளால் அக்கட்சியின் நிர்வாகிகள் அதிருப்தி அடைந் துள்ளனர். அவரை மாற்றக் கோரி முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ.க்கள், நிர்வாகிகள் என காங்கிரசின் 20 மூத்த தலைவர்கள் தங்களது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் ஜிஎம் சரூரி, விகார் ரசூல், டாக்டர் மனோகர் லால் சர்மா, முன்னாள் எம்எல்ஏக்கள் ஜுகல் கிஷோர் சர்மா, குலாம் நபி மோங்கா, சுபாஷ் குப்தா, யூனியன் பிரதேச காங்கிரஸ் துணைத் தலைவர் அன்வர் பட் உள்ளிட்டோர் பதவிகளை ராஜினாமா செய்துள்ள னர். ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீர் மாநில கட்சி பொறுப்பாளர் ரஜினி பாட்டீல் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விகார் ரசூல் கூறுகையில், “மூன்று வருட காலத்திற்கு ஜி.ஏ.மிர் தலைவராக நியமிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டது. தற்போது ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜி.ஏ.மிர் தலைமையில் கட்சி அழிவுப் பாதையில் செல்கிறது. ஏற்கெனவே 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு போய்விட்டனர்.

கட்சி தலைமையை மாற்றாவிட்டால், நாங்கள் கட்சியில் எந்த பதவியும் வகிக்க மாட்டோம் என கட்சி தலைமைக்கு 20 நாட்கள் முன்பே கடிதம் எழுதியிருந்தோம். அதற்கும் நடவடிக்கை இல்லை. இப்போது ராஜினாமா செய்துள்ளோம்” என்றார்.

காங்கிரஸ் கட்சியில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமானவர்கள். காங்கிரஸ் கட்சிக்கு இடைக்காலத் தலைவராக சோனியா இருக்கும் நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் தலைமையில் காங்கிரஸின் 23 தலைவர்கள் சோனியாவுக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதினர்.

இதனால், அதிருப்தியடைந்த காங்கிரஸ் தலைமை குலாம் நபி ஆசாத்தின் கட்சிப் பதவியை பறித்தது. மாநிலங்களவை எம்.பி. பதவியும் மீண்டும் அவருக்கு வழங்கவில்லை. இந்நிலையில், குலாம் நபிக்கு நெருக்க மான காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் கள் பதவிகளை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக் கது. காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய் திருப்பது கட்சிக்கு பின் னடைவாக கருதப்படுகிறது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x