Published : 18 Nov 2021 03:38 PM
Last Updated : 18 Nov 2021 03:38 PM

நாவலாசிரியர் ஆகிறார் ஸ்மிருதி இரானி: 29 அன்று வெளியாகிறது லால் சலாம்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

புதுடெல்லி

நாவலாசிரியர் ஆகிறார் ஸ்மிருதி இரானி; சிஆர்பிஎப் வீரர்கள் 76 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை 'லால் சலாம்' புத்தகத்தில் எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பலமுகங்கள். ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சி நடிகையாக அறிமுகமானார். நடிகையாக பிரபலமான நிலையில் பாஜகவில் சேர்ந்து ஒரு அரசியல்வாதியாக மாறினார். பின்னர் மத்திய அரசின், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைக்கான அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

மத்திய அமைச்சராக தனது துறை சார்ந்த வேலைகளுக்கு நடுவே தற்போது ஒரு நாவலையும் எழுதிமுடித்து நாவலாசிரியாக மாறியுள்ளார். சத்தீஸ்கரில் 2010ல் நாட்டுக்காக இன்னுயிரை தந்த சிஆர்பிஎப் வீரர்களின் தியாகம் இவரது வெளிவர உள்ள ஸ்மிருதி இரானி எழுதியுள்ள 'லால் சலாம்' நாவலின் மையமாக உள்ளது.

உண்மை சம்பவம்

சத்தீஸ்கர் தண்டேவாடா மாவட்டத்தில் சிந்தல்னார் கிராமத்திற்கு அருகில் இந்த உண்மை சம்பவம் நடைபெற்றது. ஏப்ரல் 2010ல் வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்களை அழிக்கும் ஆபரேஷன் நடந்தது. இதில் 8 மாவோயிஸ்ட்களும் மாவோயிஸ்டுகளின் மோசமான தாக்குதலில் 76 சிஆர்பிஎஃப் வீரர்களும் கொல்லப்பட்டனர்.

வரும் 29ஆம்தேதி வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் வெளியிட உள்ள நாவல் குறித்து ஸ்மிருதி இரானி கூறியதாவது:

இந்தியாவின் அதிகம் பேசப்படாத பகுதியில் இந்நாவலின் மையம் அமைந்துள்ளது. லால் சலாம் திரைமறைவு அரசியல் மற்றும் ஊழலில் மூழ்கியிருக்கும் ஒரு அமைப்புக்கு எதிராக விக்ரம் பிரதாப் சிங் என்ற ஓர் இளம் அதிகாரி எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய கதை. அதேநேரம் நாட்டிற்காக வாழ்நாள் முழுவதும் சேவை செய்த, குறிப்பாக சவால்களை எதிர்கொள்வதில் விதிவிலக்கான இந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் செலுத்தப்படும் அஞ்சலியாக இந்நாவலை எழுதியுள்ளேன்.

சில ஆண்டுகளாக இந்த சம்பவம் என் மனதை பாதித்துக்கொண்டிருந்தது. முழுமையான வடிவம் வருவதற்கான ஒருகாலம் வரும் வரை என் மனதின் இன்னொரு பக்கத்தில் ஒரு கதையாக உருவாகிக்கொண்டுதான் இருந்தது. விரைவில் எழுத்தில் வடித்தாக வேண்டும் என்ற தூண்டுதலும் இருந்ததால் அதை புறக்கணிக்க விரும்பவில்லை. எழுதியுள்ள கதையில் வேகத்தையும் நுண்ணறிவையும் நான் கொண்டுவர முயற்சித்துள்ளதை வாசகர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்.''

இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

வெஸ்ட்லேண்ட் புத்தக வெளியீட்டாளர் கார்த்திகா.வி.கே கூறுகையில், ''இது மிகப்பெரிய முரண்பாடுகளுக்கு எதிரான போராட்டம் பற்றியதாகும். இந்த முரண்பாடுகளை எதிர்த்த துணிச்சல், புத்தி கூர்மை மற்றும் நெகிழ்ச்சியுடன் போராடும் ஆண்களும் பெண்களும் பற்றிய அழுத்தமான ஒரு கதையாகும். வேகம், சண்டை, சஸ்பென்ஸ், மறக்கமுடியாத கதாபாத்திரங்கள் அவர்களின் சூழ்நிலைகள் எல்லாம் கொண்ட வேகமான த்ரில்லர் வகை நாவலும்கூட.

நாவலைப் படிக்கத் தொடங்கினால் ஆரம்பம் முதல் இறுதிவரை வேகமாக பக்கத்தைப் புரட்டிச்செல்லும் வகையில் நிச்சயம் வாசகரை கவர்ந்திழுக்கும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x