

மக்கள் குறைகளை ஒருமாதத்துக் குள் தீர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் 60 நாட்களுக் குள் அந்த குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என மத்திய அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
துடிப்பான மற்றும் துரித அரசு நிர்வாகத்துக்கான இயங்கு தளமாக ‘பிரகதி’ செயல்படுகிறது. இந்த தளம் மூலம் அரசு உயரதிகாரிகளு டன் பிரதமர் மோடி நேற்று உரை யாடினார். அப்போது ஜனநாயகத் தின் மிக பெரிய அம்சமான மக்கள் குறை தீர்ப்பு நடவடிக்கைக்கு அதிகாரிகள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஒருமாதத்துக்குள் மக்கள் குறை களை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவிர்க்க முடியாத பட்சத்தில், சற்று கால அவகாசம் எடுத்து 60 நாட்களுக்குள் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக பிரதமர் அலு வலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘சாலை, ரயில்வே, மின்சாரம், எண்ணெய் வளம் ஆகிய உள்கட் டமைப்பு திட்டங்களின் வளர்ச்சி குறித்தும் இந்த கூட்டத்தின்போது பிரதமர் சீராய்வு செய்தார்.
குறிப்பாக ம.பி, சத்தீஸ்கர், ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உ.பி, பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்’’ என குறிப்பிடப் பட்டுள்ளது.