சூரிய கிரகணம் எதிரொலி: திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க 11 மணிக்கு அனுமதி

சூரிய கிரகணம் எதிரொலி: திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க 11 மணிக்கு அனுமதி
Updated on
1 min read

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 14 மணி நேரம் அடைக்கப் பட்டது.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு 8 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டது.

கிரகணம் முடிந்த பிறகு நேற்று காலை 9.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு, கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து காலை 11 மணி முதல் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

சூரிய கிரகணம் காரணமாக அனைத்து கோயில்களும் மூடப் பட்ட நிலையிலும், வாயுத்தலமான காளஹஸ்தி சிவன் கோயில் மட்டும் நடை சாத்தப்படவில்லை.

நேற்று காலை, கிரகண வேளையில் மூலவருக்கு நவகிரக கவசம் அணிவிக்கப் பட்டு கிரகண கால அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in