

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகத்தின் கண்ணாடியை மாணவர் ஒருவர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேராசிரியர் அப்பா ராவ் பல்கலைக்கழக துணை வேந்தராக மீண்டும் பொறுப்பேற்கவிருந்த ஒரு சில நிமிடங்களுக்கு முன்னதாக இச்சம்பவம் நடந்துள்ளது.
கண்ணாடியை கைகளாலேயே அடித்து நொறுக்கிய மாணவர் காயமடைந்தார். இந்நிலையில், பல்கலைலக்கழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடுதல் போலீஸ் படைகளை அனுப்பிவைக்குமாறு நிர்வாக தரப்பில் கோரப்பட்டுள்ளது.
தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்குப் பின்னர் கட்டாய விடுப்பில் செல்லுமாறு துணை வேந்தர் அப்பா ராவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர் மீண்டும் துணை வேந்தர் பதவியை தொடர எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர் ஒருவர் துணை வேந்தர் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
நிலுவைத் தொகை வழங்கப்பட்டது:
இதற்கிடையில் ரோஹித் வெமுலாவுக்கான ஸ்காலர்ஷிப் தொகை ரூ.1.77 லட்சம் அவரது குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.