

டெல்லியில் நேற்று நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் பங்கேற்ற மத்திய சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் உள்நாட்டு உற்பத்தி, சுய சார்பு கொள்கை நமது உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யஉதவியது. இது இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லவும் உதவியுள்ளது. உணவு தானியம் உள்ளிட்டவற்றில் சுய சார்பை எட்டியுள்ளதோடு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியாவளர்ந்துள்ளது.உணவு உற்பத்தியில் சுயசார்பை எட்டுவதற்கு `அன்ன தாதாக் களான’ விவசாயிகள், வர்த்தகர்கள் வழியேற்படுத்திஉள்ளனர்.
மருந்து தயாரிப்பு துறையில் இந்தியா உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக கரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளுமே சுய சார்பு கொள்கையின் அவசியத்தை உணர்ந்தன. இந்தியாவின் பாரம்பரியமிக்க கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்களை ஊக்குவிக்க பிரதமர் மோடியின் தாரக மந்திரமான உள்நாட்டு தயாரிப்புக்கு குரல் கொடுப்போம் என்பதும், சுதேசி சிந்தனை செயல்பாடுகளும் உதவியாக அமைந்துள்ளன.
பிரதமரின் உள்நாட்டு பொருள் உற்பத்தி உத்தியானது இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவுவதோடு இந்தியா சுயசார்புநாடாக வளர்வதற்கும் வழியேற் படுத்தியுள்ளது. இவ்வாறு நக்வி தெரிவித்தார்.