Published : 15 Nov 2021 06:35 PM
Last Updated : 15 Nov 2021 06:35 PM

மதுவிலக்கு அமலுக்குப் பிறகு பிஹாரில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளன: நிதிஷ் குமார் பெருமிதம்

பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் | கோப்புப் படம்.

பாட்னா

மதுவிலக்கு அமல் செய்த பிறகு பிஹாரில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலத்தில் கடந்த 2016 ஏப்ரல் முதல் நாளிலிருந்து உள்நாட்டு மது விற்பனைக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டது. நாட்டு சாராயம் காய்ச்சினால், அது கள்ளச் சாராயம் என அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டது. பொது இடங்களில் குடித்தால் 7 ஆண்டுகளும், வீட்டில் குடித்து விட்டு பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தால் 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து தற்போது பிஹாரில் குற்றச் செயல்கள் வெகுவாகக் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார் கூறியதாவது:

நான் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தியதால் சிலர் எனக்கு எதிராகத் திரும்பியுள்ளனர், ஆனால் நான் இதில் தீவிரமாக இருக்கிறேன். அப்படி எதிர்ப்பவர்களை நான் மோசமானவார்களாகவே உணர்கிறேன். அது வேறு விஷயம். இது தொடர்பாக அவர்களுக்கு என்று சொந்தக் கருத்து இருக்கலாம்.

ஆனால் மக்களிடம் இதுபற்றி கேட்டோம், ஆண்கள், பெண்களிடமும் கேட்டோம். அவர்கள் ஆதரிக்கிறார்கள். இதனால் நான் மதுவுக்கு எதிராக நிற்கிறேன். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு குற்றங்கள் அதிகரிக்கவில்லை. அப்படி ஏதாவது நடந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நிர்வாகமும் காவல்துறையும் சுறுசுறுப்பாக செயல்பட்டு, எங்கு ஏதாவது நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில், மற்ற சம்பவங்கள் நடந்துள்ளன, ஒரு இடத்தில் இருந்து நக்சல்களின் சம்பவம் பதிவாகியுள்ளது. அது விசாரிக்கப்பட்டு வருகிறது. நக்சல்கள் விவகாரம் என்று வேறு விஷயம்.

ஆனால் பொதுவான குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. மதுவிலக்குக்குப் பிறகு குற்ற விகிதம் குறைந்துள்ளது என்பதையும் நான் கூற விரும்புகிறேன்.

இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x