Published : 14 Nov 2021 04:13 PM
Last Updated : 14 Nov 2021 04:13 PM

மாயாவதியுடன் பிரியங்கா காந்தி சந்திப்பு: தாயார் மறைவுக்கு நேரில் இரங்கல்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி | படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி


பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் தாயார் காலமாகிவிட்டதை அறிந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவரை நேரில் சந்தி்த்து ஆறுதல் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய நோய் காரணமாக மாயாவதியின் தாய் ராம்ரதி(வயது92) சிகிச்சைபெற்று வந்தநிலையில் நேற்று சிகிச்சைபலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதையடுத்து, தாய் மரணச் செய்தி கேட்டதும், உ.பியிலிருந்து டெல்லிக்கு மாயாவதி புறப்பட்டார். இன்று மாலை ராம்ரதியியின் இறுதிச்சடங்குகள் டெல்லியிலேயே நடக்கின்றன.

இந்நிலையில் மாயாவதியின் தாய் காலமாகிவிட்ட செய்தி கேள்விப்பட்டதும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவரை நேரடியாகச் சந்தித்தார். டெல்லியில் உள்ள நம்பர் 3, தியாகராஜ் மார்க் பகுதியில் உள்ள மாயாவதியின் வீட்டுக்கு பிரியங்கா காந்தி இன்று காலைநேரடியாகச் சென்றார்.
பிரியங்கா காந்தியைப் பார்த்ததும் அவரின் இரு கரங்களைப் பிடித்து மாயாவதி வரவேற்றார்.

மாயாவதியிடம் தாய் உயிரிழந்தது குறித்து கேட்டறிந்த பிரியங்கா காந்தி, அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். மாயாவதியின் தந்தை கடந்த ஆண்டு கலமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பி. அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் மாயாவதி, பிரியங்கா காந்தி நேருக்கு நேர் சந்தித்து பேசிக்கொண்டதும்,மாயாவதியின் துக்கத்தில் பிரியங்கா காந்தி பங்கெடுத்ததும் சிறந்த அரசியல்நாகரீகமாகப் பார்க்கப்படுகிறது.

உ.பி. மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் பேட்டி அளித்திருந்த மாயாவதி, “ வரும் தேர்தலில் எந்தக் கட்சியினருடனும் கூட்டணி கிடையாது. 2007ம் ஆண்டைப் போல் இந்த முறை பகுஜன் சமாஜ் கட்சி்க்கு தனிப்பெரும்பான்மையை மக்கள் வழங்குவார்கள்

எந்தவிதமான தேர்தல் ஒப்பந்தங்களுடன் பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலைச் சந்திக்காது. எந்த கட்சியினருடன் கூட்டணி இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் பிரியங்கா காந்தி, மாயாவதி சந்திப்பு உ.பி. அரசியல் வட்டாரத்தில் ஏதேனும் கூட்டணி உடன்பாட்டை ஏற்படுத்துமா என்பது அடுத்துவரும் மாதங்களில்தான் தெரியவரும்.

ஏனென்றால், ஒரே மாநிலத்தில் அரசியல் செய்துவதும் பாஜக, சமாஜ்வாதிக்கட்சிகள் இதுவரை மாயாவதியின் தாய் இறப்புக்கு எந்தவிதமான இரங்கலும் தெரிவிக்கவில்லை. அந்த கட்சியினரின் சார்பில் பிரதிநிதிகள் தலைவர்கள் யாரும் மாயாவதியைச் சந்திக்காதபோது, பிரியங்கா காந்தி காந்தி, மாயாவதி சந்திப்பு எதிர்காலத்தில் உ.பிஅரசியலில் ஏதேனும் மாற்றத்தைஉருவாக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x