

இந்தியாவில் கடந்த 522 நாட்களி்ல் இல்லாத அளவுக்கு கரோனா தொற்று 11ஆயிரமாகக் குறைந்தது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 11 ஆயிரத்து 271பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 44 லட்சத்து 37 ஆயிரத்து 37 ஆகஅதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.26 ஆகஉயர்ந்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 98 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 285பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 63 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,468 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், நாட்டின் பாதிப்பில் 57 சதவீதம் பேர் கேரளாவில்தான் உள்ளனர்.
இதுவரை 62.37 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 12 லட்சத்து 66 ஆயிரத்து 45பரிசோதனைகள் கடந்த 24 மணிநேரத்தில் செய்யப்பட்டுள்ளன.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33 கோடியே 83 லட்சத்து 7ஆயிரத்து 904 ஆகஉயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 1.35சதவீதமாகக் குறைந்துள்ளது. இதுவரை 1.12 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது