Published : 14 Nov 2021 03:06 AM
Last Updated : 14 Nov 2021 03:06 AM

நகரங்கள், கிராமங்களில் சுகாதாரத் துறையை வலுப்படுத்த மத்திய அரசு நிதி - தமிழகத்துக்கு ரூ.805 கோடி உட்பட ரூ.8,453 கோடி விடுவிப்பு

புதுடெல்லி

நகர்ப்புற மற்றும் கிராமப் பகுதிகளில் சுகாதார கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த தமிழகத் துக்கு ரூ.805.92 கோடி உட்பட 19 மாநிலங்களுக்கு ரூ.8,453கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறையின் செலவுத் துறை 15-வது நிதிக் குழு, 2021-22 நிதி ஆண்டு முதல் 2025-26 வரையிலான காலத்தில் மொத்தம் ரூ.4,27,911 கோடியை மாநில அரசுகளுக்கு விடுவிக்குமாறு பரிந்துரைத்துள்ளது. இதில் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.70,051 கோடியாகும். இதில் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.42,928 கோடியாகும். நகர்ப் புறங்களுக்கான ஒதுக்கீடு ரூ.26,123 கோடியாகும்.

இதில் ஆந்திர மாநிலத்துக்கான ஒதுக்கீடு ரூ.488 கோடி, அருணாச்சலுக்கு ரூ.272.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிஹார் ரூ. 1,116.30 கோடி, சத்தீஸ்கர் ரூ. 338.79 கோடி, இமாச்சல் ரூ.98 கோடி, ஜார்க்கண்ட் ரூ.444.39 கோடி, கர்நாடகா ரூ.551.53 கோடி, மத்தியப் பிரதேசம் ரூ.922.79 கோடி, மகாராஷ்டிரா ரூ.778 கோடி, மணிப்பூர், ரூ.42.87 கோடி, மிசோரம் ரூ.31.19 கோடி, ஒடிசா ரூ.461.76 கோடி, பஞ்சாப் ரூ.399.65 கோடி, ராஜஸ்தான் ரூ. 656.17 கோடி, சிக்கிம் ரூ.20.97 கோடி, தமிழ்நாடு ரூ.805.92 கோடி, உத்தராகண்ட் ரூ.150 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.828 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 9 மாநில சுகா தாரத் துறைக்கான ஒதுக்கீடு அம்மாநிலங்களின் பரிந்துரை வந்தபிறகு ஒதுக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த ஒதுக்கீட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் கண்டறிவதற்கான கட்டமைப்பு வசதிகளுக்கான ஒதுக்கீடு ரூ.16,377 கோடியாகும். வட்டார அளவிலான சுகாதார நிலையங்களுக்கான ஒதுக்கீடு ரூ.5,279 கோடியாகும். ரூ.7,167 கோடி தொகை கட் டிடங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் (பிஹெச்சி, சமுதாய சுகாதார மையங்கள் (சிஹெச்சி) ஆகியவற்றுக்கு ரூ.15,105 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் நோய் கண்டறியும் வசதிகளை உருவாக்க ரூ.2,095 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நலவாழ்வு மையங்களுக்கான ஒதுக்கீடு ரூ.24,028 கோடியாகும்.

சுகாதார அமைச்சகத்தின் நல வாழ்வுத்துறைக்கான ஒதுக்கீடு 2021-22க்காக அனுமதிக்கப் பட்ட தொகை ரூ.13,192 கோடி.இதில் இதில் ரூ.8,273 கோடிதொகை கிராமப் பகுதிகளுக்காக வும், ரூ.4,919 கோடி நகர்ப்பகுதிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுஉள்ளது.

கிராமப்புற மற்றும் நகர்ப் புறங்களில் சுகாதார கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அரசு அமைப்புகள் ஆரம்ப சுகாதார கட்டமைப்பை கண்காணிக்க வேண் டியது அவசியம். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக சுகாதாரமான சூழல் உருவாகும். உள்ளாட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து ஆரோக்கியமான மக்கள் சமூகத்தை உருவாக்க முடியும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x