ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம்: சோனியாவுடன் சச்சின் பைலட் சந்திப்பு

ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம்: சோனியாவுடன் சச்சின் பைலட் சந்திப்பு
Updated on
1 min read

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் நீக்கப்பட்டார். இதையடுத்து, அவர் பாஜக.வில் இணைவார் என்று செய்திகள் வெளியாயின.

இதையடுத்து, அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று சோனியா காந்தி உறுதி அளித்தார். எனினும், ஓராண்டுக்கு மேல் ஆகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் சச்சின் பைலட் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அடுத்த சில வாரங்களில் ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சச்சின் பைலட் நேற்று சந்தித்த பின் கூறும்போது, “காங்கிரஸ் தலைமை என்ன சொல்கிறதோ, அதை தான் 20 ஆண்டாக செய்து வருகிறேன். எனக்கு தரப்படும் பணியை திறம்பட செய்து முடித்திருக்கிறேன். கட்சி தலைமையின் முடிவுக்கு என்றும் கட்டுப்படுவேன். எனது கருத்துகளை சோனியா கேட்டறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in