தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று திருப்பதி வருகை

தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று திருப்பதி வருகை
Updated on
1 min read

தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா முதல் வர்கள் பங்கேற்கும் தென் மண்டல வளர்ச்சி கவுன்சில் மாநாடு திருப்பதியில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் நாளை நடைபெற உள்ளது.

இதில், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு மற்றும் முல்லை பெரியாறு பிரச்சினை, தென்னிந்தியா வழியாக தீவிர வாதிகள் ஊடுருவல், மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதில், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் கோவா மாநில ஆளுநர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ரேணிகுண்டா வருகிறார். இரவு திருப்பதியில் தங்கும் அவர் நாளை காலையில் நெல்லூரில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இதையடுத்து மதியம், திருப்பதியில் தென் மண்டல வளர்ச்சி கவுன்சில் மாநாட்டில் கலந்துகொள்கிறார். நாளை இரவு திருமலையில் தங்கும் அவர், 15-ம் தேதி காலை ஏழுமலையானை தரிசனம் செய் கிறார். பிறகு ரேணிகுண்டா விமானநிலையம் சென்று, அங்கிருந்து டெல்லி செல்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in