புதியக் கல்விக் கொள்கை இந்திய கல்வி முறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்: தர்மேந்திர பிரதான் நம்பிக்கை

புதியக் கல்விக் கொள்கை இந்திய கல்வி முறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்: தர்மேந்திர பிரதான் நம்பிக்கை
Updated on
1 min read

புதியக் கல்விக் கொள்கை இந்தியாவின் கல்வி முறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

சண்டிகர் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மாநாட்டில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று பங்கேற்றார். அப்போது அவர் உரையாற்றியதாவது:
உலகின் அறிவு மையமாக திகழ்வதில் இந்தியாவின் வலிமை மற்றும் கோவிட்டுக்குப் பிந்தைய புதிய உலகில் இந்தியாவின் இடத்தை வடிவமைப்பதில் கல்வியின் பங்கு முக்கியமானது.

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் மூலம் கொள்கை வடிவமைப்பை செயல்படுத்துதல், தரமான கல்வி நிறுவனங்கள், பல்முனை கலாச்சாரத்துடன் கூடிய சமூக உள்ளடக்கல் உள்ளிட்டவையும், புதுமை, தொழில்முனைவு மற்றும் சர்வதேசமயமாக்கல் ஆகியவற்றின் மீதான கவனமும் இந்தியாவின் கல்வி முறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

‘வசுதைவக் குடும்பகம்’ உலகம் ஒரே குடும்பம் என்பது இந்தியாவின் பழங்கால நம்பிக்கை. உலகளாவிய குடிமக்களை தயார்படுத்துவதற்கும், பொதுவான உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும் பொதுவான இலக்குகளை அடைவதற்கும் பொதுவான புரிதலுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in