

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
வட தமிழக பகுதியில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. வட உள் தமிழகம் மற்றும் சுற்றுப்பகுதியில் சுழற்சியாக 5.8 கிமீ வரை நீண்டுள்ளது
இந்த சுழற்சி வட உள் தமிழகம் முதல் வட கடலோர ஒடிசா வரை கடலோர ஆந்திரா முழுவதும் சராசரி கடல் மட்டத்திலிருந்து 0.9 கிமீ வரை நீண்டுள்ளது.
சூறாவளி சுழற்சி தாய்லாந்து வளைகுடா மற்றும் சுற்றுப்புறத்தில் வரை நீண்டுள்ளது. 5.8 கிமீ உயரம் வரை கடல் மட்டம் உயரத்துடன் தென்மேற்கு நோக்கி நகர்கிறது.
இந்தநிலையில் புதிய தாழ்வு நிலை தெற்கு அந்தமான் கடலில் உருவாக சாதகமான சூழல் உள்ளது. நவம்பர் 13-ம் தேதியான நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகரவும் வாய்ப்பு உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை 15-ம் தேதி இந்த கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா நோக்கி வரும்.
மழை எச்சரிக்கை
அடுத்த 3 நாட்களில் கேரளாவில் அதிக வாய்ப்புகள் உள்ளன. பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை செய்யவும் வாய்ப்புண்டு.
அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தென் உள்பகுதி கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புண்டு.
தெற்கு ஒடிசா, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும், ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்யும்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அதி கனமழை பெய்யும்.
இவ்வாறு கூறியுள்ளது.