

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு, பைலட் தனது ஆதரவாளர்களான 18 எம்எல்ஏ-க்களுடன் டெல்லியில் முகாமிட்டிருந்தார். அவர் பாஜக வில் சேரக்கூடும் என தகவல் வெளியானது.
எனினும், சோனியா, ராகுல் உள்ளிட்டோரின் வேண்டுகோளுக் கிணங்க பைலட் தனது முடிவை மாற்றிக் கொண்டார். அப்போது பைலட் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஓராண்டாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப் படாததால் சச்சின் பைலட் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில், பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தி னார்.
இதையடுத்து, கட்சித் தலைவர் சோனியாவை அசோக் கெலாட் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்திய தாகக் கூறப்படுகிறது. அப்போது, பைலட் ஆதர வாளர்களுக்கு அமைச்சரவை யில் இடம் அளிக்க கெலாட்டை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.-பிடிஐ