டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் வீட்டில் தீ விபத்து: வாடிக்கையாளருக்கு ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்க மின் வாரியத்துக்கு உத்தரவு

டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் வீட்டில் தீ விபத்து: வாடிக்கையாளருக்கு ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்க மின் வாரியத்துக்கு உத்தரவு
Updated on
1 min read

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் சோமவார்பேட்டை அருகிலுள்ள நாகூரை சேர்ந்தவர் சங்கர் (59). கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம்தேதி இவரது வீட்டின் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்தது.இதன்காரணமாக இவரது வீட்டில்மின்சாதன பொருட்கள் கருகியதுடன், வீடும் சேதமடைந்தது.

கர்நாடக மின்சாரத் துறைக்கு கீழ் இயங்கும் சாமூண்டீஸ்வரி மின் வாரியத்துக்கு எதிராக சோமவார்பேட்டை காவல் நிலையத்தில் சங்கர் புகார் அளித்தார். மேலும்மடிகேரி நுகர்வோர் நீதிமன்றத்திலும் இழப்பீடு கோரி வழக்கு தொடுத்தார்.

வழக்கை விசாரித்த மடிகேரி நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டுநவம்பர் 17-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், ‘‘சாமூண்டீஸ்வரி மின் வாரியம் வாடிக்கையாளர் சங்கருக்கு இழப்பீடாக ரூ.7.5 லட்சமும், உரிய இழப்பீடு வழங்காமல் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக‌ ரூ. 25 ஆயிரமும் வழங்க வேண்டும்'' என உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து மின்வாரிய இயக்குநர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக முதன்மை நுகர்வோர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்த‌து. அதில், ‘‘வாடிக்கையாளர் சங்கரின் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதற்கு மழை பெய்ததையோ, காற்று அடித்ததையோ காரணமாக சொல்ல முடியாது. இதனை கடவுளின் செயல், இயற்கை சீற்றம் என கூறுவது ஏற்புடையது அல்ல. சங்கரின் வீட்டில் தீ விபத்து ஏற்படுவதற்கு முந்தைய நாள், சம்பந்தப்பட்ட டிரான்ஸ்பார்மர் அருகிலுள்ள மின் கம்பி மீது மரக் கிளை விழுந்துள்ளது.

இதனை அப்போதே மின் வாரிய ஊழியர் அப்புறப்படுத்தி இருந்தால் டிரான்ஸ்பார்மர் வெடித்திருக்காது. ஊழியர்களின் அலட்சியத்தால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர் சங்கரின்வீடு சேதமடைந்ததை கணக்கில் கொண்டு அவருக்கு ரூ. 6 லட்சம்இழப்பீடாகவும், வழக்குக்காகஅவர்செலவழித்த ரூ. 10 ஆயிரத்தையும் மின் வாரியம் 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும்''என உத்தரவிடப்பட்டுள்ளது.

4 ஆண்டாக மின் வாரியத்துக்கு எதிராக வழக்கை நடத்தியதனக்கு வெற்றி கிடைத்திருப்பதால் நீதிமன்றத்துக்கு சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in