Published : 26 Mar 2016 08:26 AM
Last Updated : 26 Mar 2016 08:26 AM

ஏழைகளுக்கு பாதிப்பு இல்லாத ஜாமீன் விதிகள்: சட்டக் கமிஷன் ஆய்வு

ஏழைகள் பாதிக்கப்படாத வகை யில் ஒரே மாதிரியான ஜாமீன் விதிகளை கொண்டு வருவது குறித்து சட்ட கமிஷன் ஆராய்ந்து வருகிறது.

விரிவான ஜாமீன் சட்டம் அமல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இது தொடர்பாக சட்ட செயலாளருக்கு சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா குறிப்பு ஒன்றையும் எழுதி யிருந்தார். அதில், ‘‘ஜாமீன் தொடர் பான வழக்கு விசாரணைகளை கையாளும் விதம் திருப்திகரமாக இல்லை. செல்வந்தர்களுக்கு உடனடியாக ஜாமீன் கிடைத்து விடுகிறது. ஆனால் ஜாமீன் கிடைத்தும் நீதிமன்றம் கோரும் உத்தரவாத தொகையை செலுத்த முடியாமல் ஏழைகள் தொடர்ந்து சிறைவாசம் அனுபவிக்க வேண்டி இருக்கிறது. எனவே ஜாமீன் வழங்கும் முறையில் மிகப் பெரிய சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜாமீன் வழங்குவதில் விரிவான நடைமுறைகளை பின் பற்றப்படுவதும் பொதுமக்களி டையே கடும் அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது. எனவே செல்வந்தர்களுக்கும் ஏழை களுக்கும் எளிதில் ஜாமீன் கிடைப் பதற்கான ஒரே மாதிரியான விதி களை கொண்டு வர வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து சட்ட செயலாளர் பி.கே.மல்ஹோத்ரா இந்த விவகாரத்தை சட்ட கமிஷ னிடம் கொண்டு சென்று ஆறு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொண்டார். அந்த சமயத்தில் சட்ட கமிஷன் தலைவர் பதவி காலியாக இருந்ததால் இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.

சமீபத்தில் அந்த பதவிக்கு நீதிபதி சவுஹான் நியமிக்கப்பட் டதை தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள் ளது. இது குறித்து நேற்று அவர் கூறியதாவது:

ஒரு வழக்கறிஞராகவும், நீதிபதி என்ற முறையிலும் எனது அனுபவம் என்னவெனில், வழக்கின் தன்மையை பொறுத்து ஜாமீன் வழங்குவதை நீதிமன்றங் கள் தங்களது விருப்பப்படி முடிவு செய்து கொள்ளலாம். இதில் இருக்கும் ஒரே நடைமுறை சிக்கல் என்னவென்றால் ஏழைகள் ஜாமீன் பெறுவது தான். அவர் களுக்கு ஜாமீன் கிடைத்தாலும், அதற்கான உத்தரவாத தொகையை அவர்களால் புரட்ட முடிவதில்லை. இந்த உத்தரவாத தொகை விவகாரத்தில் வேண்டு மென்றால் சில ஆலோசனைகளை முன் வைக்கலாம். ஆனால் குறிப் பிட்ட ஒரு விதியை கையாளுங்கள் என நீதிபதிகளுக்கு அறிவுரை வழங்க முடியாது. எனினும் இது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

மேலும் ஜாமீன் தொகையை எப்படி குறைப்பது? அதற்கான நிபந்தனை என்ன? என்பது குறித் தும் ஆலோசித்து வருகிறோம். ஜாமீன் பெறுவதற்கு சில உத்தர வாதம் கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஜாமீன் பெற்ற உடனேயே சம் பந்தப்பட்டவர்கள் தலைமறை வாகி விடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இது பிரச்சினையை தான் உருவாக்கும். ஆகவே ஜாமீன் எளிதாக கிடைக்க வழி செய் வது பிரச்சினைக்கு தீர்வாகாது. அதற்கு வேறு வழியை தான் யோசிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏழைகளுக்கு ஜாமீன் கிடைத்தாலும், அதற்கான உத்தரவாத தொகையை அவர்களால் புரட்ட முடிவதில்லை. இந்த விவகாரத்தில் சில ஆலோசனைகளை முன் வைக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x