

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. இவற்றை வீட்டில் தயாரித்து, போலி பிரசாதங்களை பக்தர்களுக்கு விற் பனை செய்த தேவஸ்தான ஒப்பந்த ஊழியரை நேற்று திருமலை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயி லில் லட்டு பிரசாதம் மட்டுமின்றி தோசை, வடை, சர்க்கரை பொங்கல், புளியோதரை, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகை பிரசாதங்கள் ஏழுமலையானுக்கு படைக்கப்பட்டு அவை சில ஆர்ஜித சேவை பக்தர் களுக்கு விநியோகம் செய்யப் படுகிறது. லட்டு பிரசாதம் தவிர்த்து, மற்றவை சாதரண பக்தர்களுக்கு கிடைக்காததால் அந்த பிரசாதங்கள் அதிக விலைக்கு கள்ள சந்தையில் விற்கப்படுகின்றன.
இந்நிலையில் திருமலையில் உள்ள பிரசாதங்கள் தயாரிக்கும் இடமான ‘போட்டு’ எனும் இடத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் திருச்சானூரை சேர்ந்த ரமணா என்பவர் ஜிலேபி பிரசாதத்தை வீட்டிலேயே தயாரித்து அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தது. திருமலை போலீஸார் ரமணாவை நேற்று கைது செய்து அவரிடம் இருந்த போலி ஜிலேபி பிரசாதங் களை பறிமுதல் செய்தனர்.