Published : 11 Nov 2021 03:06 AM
Last Updated : 11 Nov 2021 03:06 AM

இந்தியாவில் அக்டோபரில் இ-காமர்ஸ் செயலிகளின் தரவிறக்கம் 11.3 கோடியானது

சென்சார் டவர் என்ற செயலிகள்ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கடந்த ஜூலையில் 8 கோடியைக் கடந்த இ-காமர்ஸ் செயலிகளின் தரவிறக்கம் அக்டோபர் மாதத்தில் 11.3கோடியைக் கடந்துள்ளது.பண்டிகைக் காலம் என்பதாலும் அமேசான், பிளிப்கார்ட் போன்றவை அதிரடி சலுகைகளை வழங்கியதாலும் இ-காமர்ஸ் செயலிகளின் தரவிறக்கம் அதிகரித்துள்ளது.

செயலிகள் தரவிறக்கத்தில் முதல் இடத்தில் மீஷோ செயலி உள்ளது. இதன் தரவிறக்கம் 1.2 கோடியாக உள்ளது.

ஆனாலும் கிளப் ஃபேக்டரி போன்ற சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதால் முன்னணி இ-காமர்ஸ் செயலிகளின் சராசரி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை செப்டம்பர் காலாண்டில் குறைந்துள்ளது.

வியட்நாம், தாய்லாந்து மற்றும்இந்தோனேசியா ஆகியவை உள்ள தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் இ-காமர்ஸ் செயலிகளின் தரவிறக்கம் ஏப்ரல் 2020-ல் உயர்ந்தது. ஆனால் அதன் பிறகு மீண்டும் சரிந்து 2019-ல் காணப்பட்ட நிலைக்கே திரும்பியுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x