குடியரசுத் தலைவர் தலைமையில் டெல்லியில் இன்று ஆளுநர்கள் மாநாடு

குடியரசுத் தலைவர் தலைமையில் டெல்லியில் இன்று ஆளுநர்கள் மாநாடு
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் 51-வது மாநாடு டெல்லியில் இன்று நடக்கிறது.

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 51-வது ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் மாநாடு இன்று நடக்கிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடக்கும் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அனைத்து மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற பிறகு அவரது தலைமையில் நடக்கும் 4-வது ஆளுநர்கள் மாநாடு இதுவாகும்.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் 2 நாட்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதன் தொடக்க அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

தண்ணீர், விவசாயம், உயர்கல்வி மற்றும் எளிதான வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளுடன் பழங்குடியினர் நலனுக்கு இந்த மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

கடந்த முறை 2 நாட்கள் மாநாடு நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஓர் நாள் மட்டும் மாநாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in