இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியதற்கான கரோனா சான்றிதழுக்கு 96 நாடுகள் அங்கீகாரம்: மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியதற்கான கரோனா சான்றிதழுக்கு 96 நாடுகள் அங்கீகாரம்: மத்திய அமைச்சர் தகவல்
Updated on
1 min read

இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை 96 நாடுகள் அங்கீகரித்துள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய 2 கரோனா வைரஸ் தடுப்பூசிகளை அதிக அளவில் பொது மக்களுக்கு செலுத்தி வருகிறோம். இதுவரை 109 கோடி பேருக்கும் அதிகமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடு செல்வதற்கான அனுமதியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியா வழங்கும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை சர்வதேச அளவில் 96 நாடுகள் பரஸ்பரம் அங்கீகரித்துள்ளன.

இதன்மூலம் இந்தியாவில் இருந்து அந்த நாடுகளுக்கு செல்லும் பொதுமக்கள் தனிமைப்படுத் துதல் உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளிலிருந்து தப்பிக்க முடியும். அதேபோல அந்த நாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. வெளிநாடு செல்ல விரும்பு பவர்கள் இந்தசான்றிதழை கோவின் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இதில் அடக்கம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. -பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in