அருணாச்சல பிரதேச எல்லைக்குள் சீனா உருவாக்கிய கிராமம் 1959-ல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி: இந்திய ராணுவம் தகவல்

அருணாச்சல பிரதேச எல்லைக்குள் சீனா உருவாக்கிய கிராமம் 1959-ல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி: இந்திய ராணுவம் தகவல்
Updated on
1 min read

அருணாச்சல பிரதேச எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாக பென்டகன் அறிக்கை குறிப்பிட்ட நிலையில், சர்ச்சைக்குரிய கிராமத்தை 1959-ம் ஆண்டு சீனா ஆக்கிரமித்தது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அருணாச்சலபிரதேசத்துக்கு சீனா அடிக்கடி உரிமை கொண்டாடி வருகிறது. அதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கடந்த வாரம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஆண்டு அறிக்கையில், அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய பகுதியில் சுமார் 100 வீடுகளைக் கொண்ட கிராமத்தை சீனா உருவாக்கி உள்ளதாகவும் இந்திய பகுதிக்குள் 4.5 கி.மீ. தூரம் வரை சீனா ஊடுருவியுள்ளதாகவும் தெரிவித்தது.

இதுகுறித்து இந்திய ராணுவஅதிகாரிகள் கூறும்போது, ‘‘அருணாச்சல பிரதேசத்தில் மேல்சுபன்சிரி மாவட்டத்தில் பென்டகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளசர்ச்சைக்குரிய பகுதி 1959-ம்ஆண்டு சீன ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகும். பல ஆண்டுகளாகவே அந்தப் பகுதியை ராணுவ முகாமாக சீனா பயன்படுத்தி வருவதோடு பல்வேறு கட்டுமானங்களையும் கட்டி வருகிறது. இவை குறுகிய காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இல்லை’’ என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in