நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே முக்கியமா?

நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே முக்கியமா?
Updated on
2 min read

ஒரு வகையில் இந்தியா தனிச்சிறப்பான நாடுதான். இங்கு மேல்தட்டு மக்கள் பேசும் மொழி அவர்களுடையது அல்ல. டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உட்பட பல பெரிய நகரங்களில் இது உண்மைதான். குறைந்த எண்ணிக்கையில் இவர்கள் இருந் தாலும் பொருளாதார கொள்கை களிலும் தேசிய செய்திகளிலும் ஆதிக்கம் செலுத்தும் நகர்ப்புற நடுத்தர குடும்பத்தினரைதான் நான் குறிப்பிடுகிறேன்.

இந்தியாவில் 5 கோடி மக்கள் தான் பாஸ்போர்ட் வைத்துள்ளனர் என்று அரசு தரவுகள் சொல் கின்றன. அப்படியானால் மக்கள் தொகையில் 5 சதவீதம். இவர்கள் தங்கள் தாய்மொழியை அது இந்தி, குஜராத்தி, தமிழ், மராத்தி, தெலுங்கு, ஒரியா, கன்னடம் எதுவாக இருந்தாலும் பேசுவார் கள். ஆனால், சிறப்பாக பேச மாட்டார்கள். தாய்மொழியில் உள்ள எழுத்து களை படிப்பார்கள். ஆனால், தாய்மொழியில் உள்ள இலக்கியங் களையோ, செய்தி களையோ அவர்கள் படிக்க மாட்டார்கள்.

பல ஆண்டுகளாகவே இந்தி யர்கள் ஆங்கிலத்தில் பேசியும் எழுதியும் வருகின்றனர். இது இப்போது இந்திய மொழியா கவே கருதப்படுகிறது. ஆனால், தொலைக்காட்சி சேனல்களில் பேசப்படும் ஆங்கிலமும், ஊடகங்களில் எழுதப்படும் ஆங்கிலமும் தெளிவில்லாதது. இந்த ஆங்கிலத்தின் ஆதிக்கம் எந்தெந்த வழிகளில் எல்லாம் நம்மை பாதிக்கிறது?

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் நகர்ப்புற நடுத்தர மக்களின் கவலைகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதே போல் நமது ஊடகங்களும் ஊட்டச் சத்து குறைபாட்டால் ஏற்படும் இறப்புகளை விட, மாணவர்கள் எழுப்பும் கோஷங்களுக்குதான் முக்கியத்துவம் தருகின்றன.

தேசத்துக்கு எதிரான கோஷங் களால் எத்தனை இந்தியர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. அந்த கோஷங்களால் நாம் அதிருப்தி அடையலாம், ஆனால் அவை வெறும் வார்த்தைகள் தான். அதேசமயம் ஊட்டச்சத்து குறை பாட்டால் ஆண்டுக்கு 5 லட்சம் இந்திய குழந்தைகள் இறக்கின் றனர். இந்த விஷயம் ஆக்ரோஷமாக விவாதம் நடத்தும் தொலைக்காட்சி சேனல்களுக்கு முக்கியமாக படவில்லை. ஏனெனில், ஆங்கிலம் பேசும் நடுத்தர குடும்பங்களை இந்த விஷயம் பாதிப்பதில்லை.

அதனால்தான் நமது பொருளாதார முன்னுரிமையும் ஒருபக்கமாக உள்ளது. 30 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடும்போது, ஊடகங் களும் நடுத்தர வர்த்தகத்தினரை பற்றியும் ரூ.1 லட்சம் கோடியில் வரவுள்ள புல்லட் ரயில் பற்றியும் பேசிக் கொண்டிருக்கின்றன. இதற்கான காரணம் மிகச் சாதா ரணமானது. அதாவது இந்தியாவில் ஏழைகளுக்கு வாய்ப்பு கிடையாது.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் களால் இறப்பவர்களைவிட, வடகிழக்கு பகுதியில் பயங்கரவாத தாக்குதல்களால் இந்தியர்கள் பலர் இறக்கின்றனர். ஆனால், தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி மட்டும் இடைவிடாமல் நாம் விவாதம் நடத்தி கொண்டிருக்கிறோம். ஏனெனில், அது நடுத்தர வர்க்கத்தினரை கவலையடைய செய்வதாக இருக்கிறது.

அதனால்தான் எந்த வீரர் பலியானாலும் அவரை ஹீரோவாக பார்க்கின்றனர். சவுரவ் காலியா முதல் ஹனுமந்தப்பா வரை இறந்த வீரர்களின் பெயர்களும் கூட இந்திய நடுத்தர மக்களுக்கு தெரியும். ஆனால், வடகிழக்கு அல்லது சத்தீஸ்கரில் பயங்கரவாதத்தால் இறந்த ஒரு பாதுகாப்புப் படை வீரரின் பெயரை சொல்லக் கூட நடுத்தர வர்க்கத்தினர் திணறுகின்றனர்.

படகு கவிழ்ந்து பலர் பலி, நெரிசலில் சிக்கி பலர் பலி, கண் சிகிச்சை முகாமில் பலருடைய பார்வை பறிபோனது, அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் பலர் பலி, கள்ளச்சாராயம் குடித்தவர்களின் பார்வை பறிபோயிற்று, பலர் பலி என்றெல்லாம் அடிக்கடி செய்திகள் வருகின்றன. இந்த செய்திகள் எல்லாம் மாணவர்கள் எழுப்பும் கோஷங்களை விவாதப் பொருளாக்கும் தொலைக்காட்சி களுக்கு முக்கியமாக இருக்காது. இங்கு ஷீனா போரா என்ற தனிப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டதை ஊடகங்கள் எப்படி செய்தியாக்கின என்பதையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

ஆங்கில மோகத்தில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு, பெரும் பான்மையாக உள்ள இந்தியர் களைப் பற்றி கவலையில்லை. நம்முடைய கவலைகள், பிரச் சினைகளை மட்டுமே தொடர்ந்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மற்ற இந்தியர்களைப் பற்றி கவலை இல்லை. இது தேச விரோதம் இல்லை என்றால், வேறு என்ன?

இந்தியர்கள் ஆங்கிலம் தெரிந்து வைத்திருப்பதில் பல சாதகங்களும் உள்ளன என்பது உண்மைதான். அதில் முதன்மை யானது பொருளாதாரம். இதன் பயன்களும் முக்கியமாக நடுத்தர வர்க்கத்தினருக்குதான். ஆனால் தேசிய உரையாடல், முன்னுரிமை கள், நமது செயல் திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கத்தினர் நமது நாட்டுக்கு விளைவித்துள்ள சேதம் அளவிட முடியாதது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in