Published : 09 Nov 2021 02:04 PM
Last Updated : 09 Nov 2021 02:04 PM

எங்கள் அமைச்சர்களுக்கு இந்தி தெரியாது: தலைமைச் செயலாளரை மாற்ற அமித் ஷாவுக்கு மிசோரம் முதல்வர் கடிதம்

மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா | கோப்புப்படம்

குவஹாட்டி

எங்கள் அமைச்சர்களுக்கு இந்தியும் தெரியாது, ஆங்கிலமும் புரியாது ஆதலால் புதிய தலைமைச் செயலாளரை மாற்றிவிட்டு மிசோ மொழி தெரிந்தவரை நியமிக்க வேண்டும் எனக்கேட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா கடிதம் எழுதியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மிசோரதத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் ஜே.சி.ராம்தங்காவை தலைமைச் செயலாளராக நியமிக்கவும் முதல்வர் கடிதத்தி்ல் வேண்டுகோள் கொடுத்துள்ளார்.

மிசோரத்தின் தலைமைச் செயலாளராக இருந்த லால்னுமாவியா சாகோ ஓய்வு பெற்றுவிட்டார். குஜராத் கேடரான சாகோ, ஓய்வு பெற்றபின் அவருக்குப் பதிலாக மத்தியஉள்துறை அமைச்சகம், ரேணு சர்மாவை புதியதலைமைச் செயலாளராக கடந்த மாதம் 29ம் தேதி நியமித்தது.

மிசோ மொழி தெரியாமல் இந்தி, ஆங்கிலம் மட்டுமே ரேணு சர்மாவுக்கு தெரியும் என்பதால் நிர்வாக ரீதியாக பலசிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி தலைமைச் செயலாளரை மாற்றக் கோரியுள்ளார். அதிலும் குறிப்பாக இந்தி, ஆங்கிலம்தங்கள் அமைச்சர்களுக்குப் புரியாது என்பதால், மிசோ மொழி தெரிந்த அதிகாரியை நியமிக்கவும், அதற்குரிய அதிகாரியின் பெயரையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

1988ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ரேணு சர்மா கடந்த 1-ம் ேததி மிசோரம் மாநில தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். ஆனால், ரேணு சர்மா பொறுப்பேற்ற அதேநாளில் மிசோரம் அரசு புதிய தலைச் செயலாளராக ஜே.சி.ராம்தங்காவை நியமித்தது. இதனால் தற்போது மிசோரம் மாநிலத்துக்கு இரு தலைமைச்செயலாளர்கள் பணியில் உள்ளனர்.

மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா அமித் ஷாவுக்கு எழுதியகடிதத்தில் கூறியுள்ளதாவது “ மிசோரம் மாநிலத்தில் மிசோ மக்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தி மொழி தெரியாது,அமைச்சர்களுக்கு இந்தி புரியாது, ஆங்கிலத்தை புரிந்துகொள்வதிலும் சிக்கல் இருக்கிறது.

இந்த பின்புலத்தில் இருக்கும் அமைச்சர்களுடன் தலைைமச் செயலாளர் மிசோ மொழி தெரியாமல் பணியாற்றினால் பல்வேறு நிர்வாகச் சிக்கல்ஏற்படும். மிசோ மொழி தெரியாமல் பணியாற்றும் தலைமைச் செயலாளரால் திறமையாகவும் செயல்படுவது கடினம்.

மிசோ மொழி தெரியாத அதிகாரியை தலைமைச் செயலாளராக நியமித்தது இல்லை. காங்கிரஸ் அரசாக இருந்தபோதும், மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாக இருந்திலும், மிசோரம் மாநிலம் உருவானதில் இருந்தே இது நடைமுறையில் உள்ளது.

இந்தியாவின் பிற மாநிலங்களில், அந்தந்த மாநிலத்தின் அடிப்படை மொழி கூட தெரியாத தலைமைச் செயலர் பதவியேற்கவே இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. தொடக்கத்திலிருந்தே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நம்பிக்கையான கூட்டணிக் கட்சியாக நாங்கள் இருக்கிறோம் என்பதால், எங்கள் கோரிக்கைய பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x