Published : 08 Nov 2021 01:09 AM
Last Updated : 08 Nov 2021 01:09 AM

நாகாலாந்தில் ‘ஆன்ட்டி கிறிஸ்து' வதந்தி- தடுப்பூசியை தவிர்த்து வரும் விசித்திர மாவட்ட மக்கள்

கோஹிமா

நாகாலாந்து மாநிலத்தின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கும் மாவட்டம் கிஃபைர். மலை கிராமங்கள் நிறைந்திருக்கும் இந்த மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை சுமார் ஒரு லட்சம் ஆகும். பல பழங்குடி சமூகங்கள் வசிக்கும் இந்த மாவட்டத்தில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர்.

இந்த மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக, கரோனா தடுப்பூசியின் வழியாக ‘ஆன்ட்டி கிறிஸ்துவின்' (இயேசுவுக்கு எதிராக செயல்படும் தீயசக்தி) பிரத்யேக எண்ணாக கருதப்படும் 666 என பொறிக்கப்பட்ட மைக்ரோ சிப் உடலுக்குள் செலுத்தப்படும் என்றவதந்தி பரவி உள்ளது. இவ்வாறு இந்த மைக்ரோ சிப் செலுத்தப்பட்டவர்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்பட்டு ஓரிரு ஆண்டுகளில் மரணம் அடைவார்கள் என்ற மூடநம்பிக்கையும் கிஃபைர்மக்களிடையே உலவுகிறது.

இதன் காரணமாக, கரோனா தடுப்பூசியை செலுத்துவதை மாவட்ட மக்கள் தவிர்த்து வருகிறார் கள். இதன் காரணமாக, மாவட்ட மக்கள் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மாவட்ட நோய் தடுப்பு அதிகாரி டாக்டர் பெவேசோ காலோ கூறுகையில், “ஆன்ட்டி கிறிஸ்து வதந்தியால் கரோனா தடுப்பூசியை மக்கள் செலுத்திக் கொள்ளாமல் இருப்பது, அவர்களுக்கு மட்டுமல்ல பிற மாவட்ட மக்களுக்கு ஆபத்தை யும் உருவாக்கும். இந்த மூடநம்பிக்கையை ஒழிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x