மார்க்சிஸ்ட் நிர்வாகிகளுக்கு 2006 கொலையில் தொடர்பு: கேரள நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை

மார்க்சிஸ்ட் நிர்வாகிகளுக்கு 2006 கொலையில் தொடர்பு: கேரள நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை
Updated on
1 min read

கடந்த 2006-ல் நடந்த கொலைவழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தொடர்பில்லை. மார்க்சிஸ்ட் நிர்வாகிகளுக்கு கொலையில் தொடர்பிருக்கிறது என்று சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கேரளாவின் தலசேரியை சேர்ந்தவர் முகமது பாசில். நாளிதழ் விற்பனையாளரான இவர் ஆரம்பத்தில் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்னர் அவர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவில் இணைந்தார். கடந்த 2006 அக்டோபர் 22-ம்தேதி தலசேரி மசூதி அருகே மர்ம நபர்கள், முகமது பாசிலை கொலை செய்தனர்.

இந்த வழக்கை மாநில குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். பின்னர் கடந்த 2008-ம் ஆண்டில் சிபிஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டில் 2 மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2016-ம் ஆண்டில் மாநிலபோலீஸார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது குற்றம் சாட்டினர். இதன்பேரில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி சுபேஷ் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் கடந்த 5-ம் தேதி அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. அதில், “முகமது பாசில் கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் காரை ராஜன்,காரை சந்திரசேகரன் ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறது. இவர்களின் உத்தரவின்பேரில் கொடிமணியும் அவரது அடியாட்களும் முகமது பாசிலை கொலை செய்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எவ்வித தொடர்பும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முகமது பாசில் வழக்கில் திருப்பம் ஏற்பட் டுள்ளது.-பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in