5 கோடி ஏழைகளுக்கு காஸ் இணைப்பு

5 கோடி ஏழைகளுக்கு காஸ் இணைப்பு
Updated on
1 min read

அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் 5 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு, அந்தந்த குடும்பத்திலுள்ள பெண்களின் பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இந்த திட்டம் ஊரகப் பகுதியிலுள்ள பெண்கள், புகையின்றி சமைக்க உதவும். இத்திட்டத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் பணி உருவாகும் என்பதால் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, 75 லட்சம் பயனாளர்கள் தங்களின் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர் என அருண் ஜெட்லி தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in