கர்நாடகாவில் பசுவை பாதுகாக்க‌ விரைவில் 250 கோசாலைகள்

கர்நாடகாவில் பசுவை பாதுகாக்க‌ விரைவில் 250 கோசாலைகள்
Updated on
1 min read

கர்நாடக கோயில்களில் பசுக்களை பாதுகாக்கும் வகையில் புதிதாக 250 கோசாலைகளை திறக்க முடிவெடுத்துள்ளது.

க‌ர்நாடக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே நேற்று பெலகாவியில் உள்ள கபிலேஷ்வர் கோயிலில் பசுக்களை பாதுகாக்கும் கோசாலையை திறந்து வைத்தார். கோயிலில் தனது கணவரும் பாஜக எம்பியுமான அன்னா சாஹேப் உடன் இணைந்து கவு பூஜை செய்து வழிபட்டார்.

பின்னர் இந்து அற நிலையத் துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே கூறும்போது, ''இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில்களில் பசுக் களை பாதுகாத்து, பராமரிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கோசாலைகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. இன்னும் சில மாதங்களில், முதல்கட்டமாக 250 கோசாலைகள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட இருக்கின்ற‌ன.

இந்துக்கள் தெய்வமாக கருதும் பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த‌ கோசாலைகளை இந்து அறநிலையத் துறையின் வாயி லாக அரசே ஏற்று நடத்தும். அதேவேளையில் இந்த கோசாலை களுக்கு செய்யப்படும் செலவை சம்பந்தப்பட்ட கோயில்கள் ஏற்கும். இந்த திட்டத்தின் மூலம் பசுக்கள் பாதுகாக்கப்படுவதுடன், இறைச்சிக்காக கொல்லப்படு வதும் தடுக்கப்படும்''என்று தெரி வித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in