

தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா அளித்துள்ள பாலியல் அத்துமீறல் புகார் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) சில விவரங்களை போலீஸ் கேட்டுள்ளது.
முக்கியமாக ப்ரீத்தி ஜிந்தா விடம், நெஸ் வாடியா தவறாக நடந்து கொண்டாதாக கூறப்படும் வான்கடே மைதானத்தின் கார்வார் பெவிலியனுக்கு அன்றைய தினம் வந்தவர்கள், சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில் அங்கு இருந்தவர்களின் விவரம் உள்ளிட்டவற்றை கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தன்னிடம் நெஸ் வாடியா அத்துமீறி நடந்து கொண்டபோது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் சிலர், வான்கடே மைதானத் தின் அதிகாரிகள், பணி யாளர்கள் சிலரும் அங்கிருந்ததாக ப்ரீத்தி ஜிந்தா தனது புகாரில் தெரிவித்துள்ளார். எனவே அவர் களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெஸ் வாடியாவின் செய்கை கள் குறித்து ஐபிஎல் தலைவர் ரஞ்ஜிப் பிஸ்வாலிடம் அப்போதே தெரிவித்ததாகவும் ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார். இது தொடர்பாக பிஸ்வாலிடமும் வாக்குமூலம் பெற இருப்பதாக போலீஸ் அதி காரிகள் கூறியுள்ளனர்.
எனினும் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்க பிஸ்வால் மறுத்துவிட்டார். தன்னிடம் போலீஸார் விசாரிக்கும்போது இது தொடர்பாக பதிலளிப்பேன் என்று கூறியுள்ளார்.
நெஸ் வாடியா, ப்ரீத்தி ஜிந்தா இருவருமே கிங்ஸ் லேவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக இருப்பவர்கள். குஜராத்தை சேர்ந்த நெஸ் வாடியா பிரபல தொழிலதிபர். இருவரும் முன்பு காதலர்களாக இருந்தவர்கள்.
மே மாதம் 30-ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக் கிடையே ஐபிஎல் போட்டி நடந்த போது, தன்னிடம் நெஸ் வாடியா பாலியல்ரீதியாக தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், மோசமான வார்த்தைகளில் பேசியதாகவும் ப்ரீத்தி ஜிந்தா புகார் அளித்துள்ளார்.