

தீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்து நச்சுப் புகை காரணமாக தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம பகுதிகளிலும் இரண்டாவது நாளாக இன்றும் கடுமையான காற்று மாசு உருவாகியுள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்பைக் காட்டிலும் டெல்லியில் காற்று மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதன் மூலம் மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வேளாண் அறுவைடைக்கு பிறகு விவசாயிகள் கழிவுகளை எரித்து வரும் நிலையில் தீபாவளி பட்டாசு காரணமாக காற்று மாற்று மேலும் அதிகரித்துள்ளது.
பட்டாசு வெடிப்பதற்கு டெல்லி அரசு தடை விதித்திருந்தாலும் நகரின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டாதால் நேற்று காற்று மாசின் அளவு 655.07 எனும் அளவை எட்டியது. இதனால் மக்கள் மூச்சுவிட முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
தீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்து நச்சுப் புகை காரணமாக தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம பகுதிகளிலும் இரண்டாவது நாளாக இன்றும் கடுமையான காற்று மாசு உருவாகியுள்ளது.
காலை 6 மணியளவில் டெல்லியின் காற்று மாசு அளவு 533 பிஎம் அளவில் இருந்தது. நொய்டா, குருகிராம், காசியாபாத் மற்றும் கிரேட்டர் நொய்டாவின் அருகிலுள்ள பகுதிகளில் காற்று மாசு அதிகமாக இருந்தது.
இந்த பாதிப்பு என்பது நாளை மாலை வரை இருக்கக்கூடும் என டெல்லி மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்று மாசு மோசமான வரம்பிற்குள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணா அரசுகளால் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டபோதும் மக்கள் தடையை மீறி வெடித்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.