

தீபாவளிக்கு ஊழியர்களுக்கு இ ஸ்கூட்டர் பரிசளித்துள்ளார் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முதலாளி ஒருவர். குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் சுபாஷ் தவார். குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஆடை தொழில் நடத்தி வருபவர் சுபாஷ் தவார்.
இவர் தனது நிறுவனத்தைச் சேர்ந்த 35 ஊழியர்களுக்கு இ ஸ்கூட்டர்களைப் பரிசாக அளித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு அவர் இந்தப் பரிசை அளித்துள்ளார்.
அதிகரித்து வரும் பெட்ரோல் விலையைக் கருத்தில் கொண்டு இந்தப் பரிசை எங்கள் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளோம் என்றார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன. இதனால் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயை நாடுமுழுவதும் கடந்தது, டீசலும் லி்ட்டர் 100 ரூபாய்க்கும் மேல் பல மாநிலங்களில் உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கத்தொடங்கின.
இதையடுத்து, பெட்ரோல் மீதான உற்பத்தி வரிசை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து நேற்று மத்திய அரசு அறிவித்தது இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பையடுத்து,பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.