தேர்தல் பயம்; பெட்ரோல், டீசல் மீதான உற்பத்திக் குறைப்பு: பிரியங்கா காந்தி கிண்டல்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி | கோப்புப்படம்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி | கோப்புப்படம்
Updated on
1 min read


சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததன் பயம், அடுத்துவரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அச்சம் காரணமாகவே பெட்ரோல், டீசல் மீதான உற்பத்திவரியை மத்திய அரசு குறைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, குற்றம்சாட்டியுள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன.

இதனால் பெட்ரோல் லிட்டர் 100ரூபாயை நாடுமுழுவதும் கடந்தது, டீசலும் லி்ட்டர் 100 ரூபாய்க்கும் மேல் பலமாநிலங்களில் உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுைமயாக விமர்சிக்கத்தொடங்கின.

இதையடுத்து, பெட்ரோல் மீதான உற்பத்தி வரிசை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து நேற்று மத்திய அரசு அறிவித்தது இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பையடுத்து,பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலில் பாஜகவுக்கு பயங்கரமான அடி கிைடத்து 14 தொகுதிகளில் தோற்றது.இதையடுத்து, பெட்ரோல், டீசல் வரியை குறைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரி குறைப்பு உள்மனதிலிருந்து வரவில்லை, அடுத்துவரும் தேர்தல் குறித்த பயம். மத்திய அரசு தான் அடித்த கொள்ளைக்கு வரும் தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in