ஐடிபிபி டிஐஜி தந்தைக்கு சல்யூட் வைக்கும் டிஎஸ்பி மகள்: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

தந்தைக்கு சல்யூட் வைக்கும் மகள் அபேக் ஷா நிம்பாடியா
தந்தைக்கு சல்யூட் வைக்கும் மகள் அபேக் ஷா நிம்பாடியா
Updated on
1 min read

நாட்டின் துணை ராணுவப் பிரிவுகளில் ஒன்றான இந்தோ-திபெத் எல்லை போலீஸில் (ஐடிபிபி) டிஐஜியாக பணியாற்றி வருபவர் ஏபிஎஸ் நிம்பாடியா. இவர் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்தவர்.

இவரது மகள் அபேக் ஷா நிம்பாடியா. இவர் மொராதாபாத்தில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் போலீஸ் அகாடமியில் பட்டம் படித்தார். இங்கு படித்து முடித்தவுடன் நிம்பாடியா துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) தேர்வு பெற்றார். பயிற்சி பெற்ற வர்களுக்கு உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து அனுப்பும் அணிவகுப்பு நிகழ்ச்சி அண் மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின்போது டிஐஜி நிம்பாடியாவுக்கு புதிதாக பணிக்குத் தேர்வான டிஎஸ்பியும் மகளுமான அபேக் ஷா சல்யூட் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட 2 புகைப்படங்களை இந்தோ திபெத் எல்லை காவல் படை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தற்போது உத்தரபிரதேசத் திலேயே பணியாற்ற அபேக் ஷாவுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in