வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வெற்றி ஊர்வலம் நடத்தக்கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

வாக்கு எண்ணிக்கை முடிந்து பிறகு யாரும் வெற்றி ஊர்வலம் நடத்தக் கூடாது. வெற்றி பெற்ற வேட்பாளருடன் 2 நபர்களுக்கு மேல் செல்ல அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் காலியாக உள்ள 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. மத்தியபிரதேசத்தில் கந்த்வா, இமாச்சலபிரதேசத்தில் மாண்டி, யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதுபோல் அசாம் (5 தொகுதிகள்), மேற்கு வங்கம் (4), ம.பி., இமாச்சலபிரதேசம், மேகாலயா (தலா 3), பிஹார், கர்நாடகா, ராஜஸ்தான் (தலா 2), ஆந்திரா, ஹரியாணா, மகாராஷ்டிரா, மிசோரம், தெலங்கானா (தலா 1) என 13 மாநிலங்களில் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை முடிந்து பிறகு யாரும் வெற்றி ஊர்வலம் நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை முடிந்து பிறகு யாரும் வெற்றி ஊர்வலம் நடத்தக் கூடாது. வெற்றி பெற்ற வேட்பாளருடன் 2 நபர்களுக்கு மேல் செல்ல அனுமதி இல்லை. அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியுடன் மட்டும் சென்று சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து தேர்தல் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். அங்கு தொண்டர்கள் கூடக்கூடாது. கரோனா தொற்று பரவல் கட்டு்பாடுகள் நடைமுறையில் இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in