இந்தியாவில் புதிதாக மேலும் 10,423 பேருக்கு கரோனா தொற்று: கடந்த பிப்ரவரிக்குப் பின் மிகக் குறைந்த அளவில் பாதிப்பு

இந்தியாவில் புதிதாக மேலும் 10,423 பேருக்கு கரோனா தொற்று: கடந்த பிப்ரவரிக்குப் பின் மிகக் குறைந்த அளவில் பாதிப்பு
Updated on
1 min read

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,423 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த பிப்ரவரிக்குப் பின் மிகக் குறைந்த அளவில் பதிவான பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 10,423. இதில் கேரளாவில் மட்டும் 7,772 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,42,96,237.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 15,021.

இதுவரை குணமடைந்தோர்: 3,36,83,581.

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.20% என்றளவில் உள்ளது. இது கடந்த மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 443. இதில் கேரளாவில் மட்டும் 86 பேர் உயிரிழந்தனர்.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,58,880.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,53,776 . இது கடந்த 250 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைவு.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,06,85,71,879 கோடி.

வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 1.16% ஆக உள்ளது. இத கடந்த 39 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 1.03% ஆக உள்ளது. இத கடந்த 29 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.

பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in