‘‘விடாமுயற்சிக்கு பெயர் பெற்ற ஆந்திர மக்கள்; வைராக்கியம் கொண்ட கர்நாடகா: அழகிய பகுதி கேரளா’’-  பிரதமர் மோடி பாராட்டு

‘‘விடாமுயற்சிக்கு பெயர் பெற்ற ஆந்திர மக்கள்; வைராக்கியம் கொண்ட கர்நாடகா: அழகிய பகுதி கேரளா’’-  பிரதமர் மோடி பாராட்டு
Updated on
1 min read

மாநில நிறுவன நாளை முன்னிட்டு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு மாநில நிறுவன தின வாழ்த்துக்கள். ஆந்திர பிரதேச மக்கள் தங்கள் திறமை, உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர்கள். அதனால்தான் அவர்கள் பல துறைகளில் வெற்றி பெறுகின்றனர். ஆந்திர பிரதேச மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், வெற்றிகரமாகவும் இருக்கட்டும்”, இவ்வாறு கூறியுள்ளார்.

கர்நாடக மாநில தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநில மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் "கர்நாடக தினமான இந்த சிறப்பு தினத்தில் வாழ்த்துகள். புதுமையான கண்டுபிடிப்புகளில் வைராக்கியம் கொண்ட மக்களால் கர்நாடகா தனி முத்திரையைப் பதித்துள்ளது. சிறந்த ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவனங்களில் இம்மாநிலம் முன்னணியில் உள்ளது. வரும் காலங்களில் கர்நாடகா வெற்றியின் புதிய உச்சங்களை எட்டட்டும்” என்று கூறியுள்ளார்.

இதுபோலவே மாநில தினத்தை முன்னிட்டு கேரள மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பா அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "கேரள மக்களுக்கு மாநில நிறுவன தின வாழ்த்துகள். கேரளா அதன் அழகிய சுற்றுப்புறங்கள் மற்றும் அதன் மக்களின் உழைப்புத் தன்மைக்காக பரவலாகப் போற்றப்படும் மாநிலம். கேரள மக்கள் தங்களின் பல்வேறு முயற்சிகளில் வெற்றி பெறட்டும்” என்று கூறியுள்ளார்.

இதுபோலவே ஹரியாணா, ம.பி. சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில மக்களுக்கும் நிறுவன தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in