ஆப்கன் சிறுமி பிரதமர் மோடிக்கு அனுப்பிய காபூல் நதி நீர்; அயோத்தியில் அபிஷேகம்' செய்த யோகி ஆதித்யநாத்

கங்கை நீருடன் காபூல் நதி நீரைக் கலந்து அயோத்தி ராமஜென்மபூமியில் ஜல் அபிஷேகம் செய்யும் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் | படம்: ஏஎன்ஐ.
கங்கை நீருடன் காபூல் நதி நீரைக் கலந்து அயோத்தி ராமஜென்மபூமியில் ஜல் அபிஷேகம் செய்யும் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் | படம்: ஏஎன்ஐ.
Updated on
1 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் இடத்தில் காபூல் நதிநீரைக் கொண்டு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 'ஜல் அபிஷேகம்' செய்தார்.

உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து அங்கு பிரமாண்டமான ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டுவிழாவை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழுவதும் வரும் 2023ல் நிறைவுபெறும் என தெரிகிறது.

அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுமி அனுப்பிய காபூல் நதி நீரை கொண்டு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை 'ஜல் அபிஷேகம்' செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி காபூல் நதியின் நீர் கங்கை நீருடன் கலந்து பின்னர் ராமர் கோயில் கட்டும் இடத்தில் ஊற்றப்பட்டதாகவும் அப்போது, முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் உள்ள கோயில் தளத்தில் ராம் லல்லாவுக்கு பிரார்த்தனை செய்ததாகவும் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

முதல்வர் ஆதித்யநாத் இன்று அதிகாலை அயோத்தி புறப்படுவதற்கு முன்பு லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமியில் காபூல் நதி நீரை வழங்குவதற்காக ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார். அதன்படி, அதை ராமருக்கு காணிக்கையாக அயோத்திக்குச் செல்கிறேன்” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in