Published : 31 Oct 2021 15:06 pm

Updated : 31 Oct 2021 15:15 pm

 

Published : 31 Oct 2021 03:06 PM
Last Updated : 31 Oct 2021 03:15 PM

‘‘முன் எப்போதும் இல்லாத வளர்ச்சி, இலக்குகளை அடைந்த இந்தியா’’- பிரதமர் மோடி பெருமிதம்

sardar-patel

புதுடெல்லி

முன் எப்போதும் இல்லாத வளர்ச்சி, சிரமமான இலக்குகளை அடைந்திருப்பது, சர்தார் படேலின் கனவுகள்படி இந்தியா கட்டமைக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

சர்தார் படேல் வரலாற்று ஆளுமை மட்டுமல்ல அவர் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் வாழ்கிறார். ஒற்றுமை என்ற செய்தியை முன்னெடுத்துச் செல்லும் மக்கள் சிதைவுபடாத ஒற்றுமை உணர்வின் உண்மையான அடையாளமாக இருக்கிறார்கள் .

நாட்டின் மூலை முடுக்குகளிலும் தேசிய ஒருமைப்பாட்டு விழா நடப்பதும், ஒற்றுமை சிலை அருகே நிகழ்வுகள் நடப்பதும் இதே உணர்வைப் பிரதிபலிக்கின்றன. புவிசார்ந்த நிலையில் மட்டும் இந்தியா ஒன்றாக இல்லை என்றும் சிந்தனைகள், சித்தாந்தங்கள், நாகரீகம், கலாச்சாரம் ஆகியவற்றில் பொதுவான நிலைகளையும் நாடு கொண்டிருக்கிறது.

130 கோடி இந்தியர்கள் வாழும் இந்த பூமி நமது ஆன்மா, கனவுகள், பெருவிருப்பங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருக்கிறது.

ஒரே இந்தியா என்ற உணர்வால் இந்தியாவின் ஜனநாயக மரபுகளை வலுப்படுத்த வேண்டும். நாட்டின் இலக்குகளை எய்துவதற்கான திசையில் ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் கூட்டு முயற்சி தேவை. வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய, உணர்வுபூர்வமான, விழிப்புள்ள இந்தியாவை சர்தார் படேல் விரும்பினார். இந்தியா நல்லுறவைக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் வளர்ச்சியையும் கொண்டிருக்கிறது.

சர்தார் படேலால் ஊக்கம்பெற்றுள்ள இந்தியா, உள்ளேயிருந்து மற்றும் வெளியேயிருந்து வரும் சவால்களை சந்திக்கும் முழுமையான திறன் பெற்றதாக மாறியுள்ளது.

தேவையற்ற சட்டங்களை நாடு ரத்துசெய்துள்ளது. ஒற்றுமையின் சிந்தனைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துத் தொடர்பையும் அடிப்படைக் கட்டமைப்பையும் அதிகப்படுத்தியிருப்பதால் புவியியல் ரீதியான, கலாச்சார ரீதியிலான தூரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இன்று ‘ஒரே இந்தியா, உன்னத இந்தியா’ என்ற உணர்வு வலுவடைந்திருப்பதால் சமூக, பொருளாதார, அரசியல் சட்டப்படியான ஒருங்கிணைப்பின் ‘மகா யாகம் நடந்துகொண்டிருக்கிறது. என்றும் நீர், நிலம், வான், விண்வெளி ஆகியவற்றில் நாட்டின் உறுதியும் திறனும் முன் எப்போதும் இல்லாத வகையில் உள்ளது. தற்சார்பு இந்தியா இயக்கத்தின் புதிய பாதையில் தேசம் முன்னோக்கி செல்லத்தொடங்கியுள்ளது. சுதந்திரத்தின் 75வது ஆண்டு சகாப்தத்தில் ‘அனைவரின் முயற்சி’ என்பது கூடுதல் பொருத்தமுடையதாக இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத வளர்ச்சி, சிரமமான இலக்குகளை அடைந்திருப்பது, சர்தார் சாகேபின் கனவுகள்படி இந்தியாவைக் கட்டமைப்பது என்பதன் சகாப்தமாக சுதந்திரத்தின் 75வது ஆண்டு உள்ளது.

சர்தார் படேலின் ஒரே இந்தியா என்பதன் பொருள் அனைவருக்கும் சம வாய்ப்புகள் என்பதாகும். ஒரே இந்தியா என்பது பெண்கள், தலித் மக்கள், நலிவடைந்தவர்கள், பழங்குடியினர், வனவாசிகள் ஆகியோருக்கு சம வாய்ப்புகள் அளிக்கும் இந்தியா. எந்தவித பாகுபாடும் இல்லாமல், அனைவருக்கும் வீட்டுவசதி, மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை எளிதில் கிடைக்கச்செய்வதாகும். அனைவரும் முயற்சி செய்வோம் என்பதில் இதைத்தான் நாடு செய்துவருகிறது .

புதிய கோவிட் மருத்துவமனைகள், அத்தியாவசிய மருந்துகள், 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் ஆகியவற்றை எல்லாம் ஒவ்வொரு குடிமகனின் கூட்டான முயற்சிகள் காரணமாகவே சாத்தியமாகியுள்ளது.

அரசுத் துறைகளின் கூட்டான சக்தியை பயன்படுத்துவதற்குப் பிரதமரின் விரைவுசக்தி தேசியப் பெருந்திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது. அரசுடன் மக்களின் ‘விரைவு சக்தி’ இணைந்தால் அசாத்தியம் என்பது எதுவும் இல்லை. எனவே நமது ஒவ்வொருவரின் செயலும் விரிவான தேசிய இலக்குகளை கருத்தில்கொண்டதாக இருக்கவேண்டும்.

மாணவர்கள் தங்களின் படிப்பு அல்லது பொருட்கள் வாங்க செல்லுமிடத்தைத் தெரிவுசெய்யும்போதே குறிப்பிட்ட துறையின் புதிய கண்டுபிடிப்புகளையும் அவர்கள் செய்யமுடிந்துள்ளது. மக்கள் தங்களின் சொந்த விருப்பங்களுடன் தற்சார்பு இந்தியாவின் இலக்கையும் மனதில் கொள்ளவேண்டும். அதே போல் தொழில்துறையினர், விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்களும் தங்கள் தெரிவுகளின்போது நாடு நிர்ணயித்துள்ள இலக்குகளையும் மனதில்கொள்ளவேண்டும்.

நாட்டின் பலத்தில் மக்களின் பங்கேற்பை அரசு உருவாக்கியுள்ளது. ஒரே இந்தியா என்பதை முன்னெடுக்கும்போதெல்லாம் நாம் வெற்றிபெறுகிறோம் என்றும் இது உன்னத இந்தியா என்பதற்கும் பங்களிப்பு செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


தவறவிடாதீர்!புதுடெல்லிஇந்தியாபிரதமர் மோடிமுன் எப்போதும் இல்லாத வளர்ச்சிSardar PatelPM

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x