

கேரளாவில் இருந்து மாநிலங்களவைக்கு அந்தோணி, வீரேந்திர குமார், சோமபிரசாத் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏ.கே.அந்தோணி (காங்கிரஸ்), எம்.பி. வீரேந்திர குமார் (ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் சோமபிரசாத் (மார்க்சிஸ்ட்) ஆகியோர் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் இறுதி பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மற்ற வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை. சட்டப் பேரவையில் கட்சிகளின் பலத்தை வைத்துப் பார்க்கும்போது, இவர் கள் மூவரும் தேர்வாவது உறுதி யாகி விட்டது.
வேட்பு மனு திரும்பப் பெறு வதற்கு இன்று மதியம் 3 மணி வரை அவகாசம் உள்ளது. அதன் பிறகு, அவர்கள் தேர்வானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படும்.
அந்தோணி, வீரேந்திர குமார் ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்பதற்கு, எம்எல்ஏ வி. சிவன்குட்டி ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இதனை, சட்டப்பேரவைச் செயல ரும் தேர்தல் நடத்தும் அலுவல ருமான பி.டி. சாரங்கதாரன் நிராகரித்து விட்டார்.
“கடந்த 10 ஆண்டுகளாக அரசு இல்லத்தில் தங்கி வரும் இருவரும், வாடகை, இதர பயன்பாட்டுக் கட்டணங்களை நிலுவையின்றிச் செலுத்தியிருப்பதற்கான கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வில்லை” எனக் கூறி ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருந்தது.