

புதிய ராணுவ தளபதியாக லெப்டிணென்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் நியமிக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
தற்போது ராணுவ தலைமை தளபதியாக இருக்கும் ஜெனரல் விக்ரம் சிங்கின் பதவிக்காலம் ஜூலை 31ம் தேதியுடன் முடிகிறது.
ராணுவ நடைமுறைகளின்படி இரண்டு மாதங்களுக்கு முன்பே புதிய தளபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதன்படி, புதிய ராணுவ தளபதியாக லெப்டிணென்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாகை முந்தைய ஐ.மு.கூட்டணி அரசு நியமித்தது.
இந்நிலையில், புதிய ராணுவ தளபதி நியமனத்தில் சுய விருப்பங்கள் அடிப்படையில் குளறுபடி நடந்திருந்திருப்பதாகவும், எனவே தல்பீர் சிங் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் லெப்டிணென்ட் ஜெனரல் ரவி தஸ்தானே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான அமர்வு முன்னர் வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட அமர்வு அடுத்த மாதம் (ஜூலை 2-வது வாரத்தில்) விசாரணை நடைபெறும் என தெரிவித்தது.