Last Updated : 30 Oct, 2021 03:13 AM

 

Published : 30 Oct 2021 03:13 AM
Last Updated : 30 Oct 2021 03:13 AM

அயோத்தி ராமர் கோயிலுக்காக இலங்கை அசோக வனத்தின் கல், செடிகள் ஒப்படைப்பு

புதுடெல்லி

இலங்கையின் அசோக வனத்தி லிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்காக கொண்டு வரப்பட்ட கல் மற்றும் செடி அதன் அறக்கட்டளை தலைவரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ராமர் கோயில் கட்டப்படுகிறது. இந்நிலையில் இலங்கை மன்னன் ராவணன், அசோக வனத்தில் சீதையை சிறை வைத்திருந்ததாக ராமாயண காவியத்தில் பதிவாகி உள்ளது. எனவே அசோக வனத்தின் முக்கியத்துவம் கருதி, அங்கிருந்து கல் மற்றும் செடி அயோத்தி ராமர் கோயிலில் பயன்படுத்துவதற்காக அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள இலங்கையின் தூதர் மிலிந்த் மொரடோடா, துணைத் தூதர் நிலுகா கத்ருகாமோவா ஆகியோர் தங்கள் நாட்டு அரசின் சார்பில் அயோத்தி வந்திருந்தனர். இவர்கள் அசோக வனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கல்லை, ஸ்ரீராம ஜென்மபூமிதீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை யினரிடம் ஒப்படைத்தனர்.

இதை அறக் கட்டளையின் தலைவர் சம்பக் ராய் பெற்றுக் கொண்டார். பிறகு கோயிலின் கட்டுமானப் பணிகளை இலங்கையின் தூதர்கள் பார்வை யிட்டனர்.

இதுகுறித்து இலங்கையின் துணைத் தூதர் மிலிந்த் கூறும் போது, “அசோக வனத்தின் கல், அயோத்தி ராமர் கோயில் கட்ட அளிக்கப்பட்டதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே புதிய ஆன்மீக உறவு உருவாகியுள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறை சார்பில் ராமாயண யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் அயோத்தி உட்படராமரின் முக்கிய புனித்தலங் களுக்கு முக்கியத்துவம் அளிக் கப்பட்டுள்ளது” என்றார்.

அயோத்தியிலிருந்து உ.பி.யின் தலைநகரான லக்னோ வந்த இலங்கை குழுவினர் அங்குள்ள அயோத்தியின் ராஜவம்சத்தை சேர்ந்த விமலேந்திரா மோகன் மிஸ்ரா வீட்டில் விருந்துண்டனர். அயோத்தி ராமர் கோயில் 2023-ம் ஆண்டு டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x