Published : 29 Oct 2021 03:09 AM
Last Updated : 29 Oct 2021 03:09 AM

ஹரியாணாவில் விவசாயிகள் போராடும் இடம் அருகே லாரி மோதி 3 பெண்கள் உயிரிழப்பு

வேளாண் சட்டங்களை எதிர்த்து ஹரியாணாவில் பகதூர்கர் என்ற இடம் அருகே திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்ட இடத்துக்கு அருகே நேற்று காலை ரயில் நிலையம் செல்வதற்காக காத்திருந்த பெண்கள் மீது வேகமாக வந்த லாரி ஒன்று மோதியது. இதில் 3 பெண்கள் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் இரண்டு பெண்களுக்கு காயம் ஏற்பட்டது.

இந்தப் பெண்கள் அனைவரும் கடந்த 10 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடந்த இடத்தில் தங்கிவிட்டு நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ரயில் நிலையம் செல்ல வாகனத்துக்காக காத்திருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். ஏற்கெனவே, உ.பி. மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவத்திலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்திலும் 8 பேர் இறந்ததும் அது தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x