தென் பசிபிக் கடலில் சீனா ஆக்கிரமிப்பு: அட்மிரல் கரம்பீர் சிங் கண்டனம்
தென் பசிபிக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைககள் குறித்த பெயரை குறிப்பிடாமல் கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் கண்டனம் தெரிவித்தார்.
இந்திய கடற்படையின் வருடாந்திர முக்கிய மாநாடான இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை அக்டோபர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது.
இந்திய-பசிபிக் பகுதியில் உருவாகும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை ஆய்வு செய்வதே இந்த வருடாந்திர கூட்டத்தின் நோக்கமாகும். ‘‘21-ம் நூற்றாண்டில் மாறிவரும் கடல்சார் யுக்தி: கட்டாயங்கள், சவால்கள் மற்றும் எதிர்வரும் பாதை’’ என்பது இந்த வருட மாநாட்டின் மையக்கருவாகும்.
பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் மாநாட்டில் உரையாற்றினர். பல்வேறு அமர்வுகளுக்கும் ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ளது.
இந்திய-பசிபிக் கடல்சார் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல் மாற்றங்கள் குறித்த விரிவான விவாதமும் நடைபெறுகிறது.
இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘கடல் சட்டம் குறித்த ஐநா மாநாட்டில் முடிவுசெய்யப்பட்டபடி அனைத்து நாடுகளின் உரிமைகளை மதிப்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது. சரக்குப்போக்குவரத்து, கருத்துக்கள் பரிமாற்றம், புத்தாக்கம், மற்றும் உலக நாடுகளை நெருங்கிவரச் செய்வதற்கான பங்களிப்பு ஆகியவற்றிற்கு கடல்கள் முக்கிய தகவல் தொடர்பு இணைப்பாக உள்ளது.
21ம் நூற்றாண்டின் கடல்சார் யுக்தியில் பரிணாமம் பிராந்தியத்தின் கடந்தகாலத்தைச் சார்ந்துள்ளது’’ எனக் கூறினார்.
இந்த மாநாட்டில் கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் பேசினார் அப்போது அவர் தென் பசிபிக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைககள் குறித்த பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பேசினார். அவர் கூறியதாவது:
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அதிக ஆதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பெற சில நாடுகள் நிலத்தை மையமாகக் கொண்ட பிராந்திய மனநிலையை பயன்படுத்துகின்றன. வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தைவான் போன்ற பல நாடுகளின் இறையாண்மை தகராறுகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
