

இந்தியாவின் மணிமகுடமான ஆபரணம் காஷ்மீர், இந்த அழகான பகுதிக்குச் செல்லுங்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் அண்மையில் அடுத்தடுத்த அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து செயல்படும் ‘எதிர்ப்பு முன்னணி’ என்ற தீவிரவாத இயக்கம் உள்ளது.
இதனையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மை இந்து மற்றும் சீக்கிய சமூகங்களை பயமுறுத்தும் எதிர்ப்பு முன்ணணியை சேர்ந்த தீவிரவாதிகளை ஒடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, ஜம்மு - காஷ்மீர் சென்றார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாயன்று ஜம்மு-காஷ்மீரில் இருந்து டெல்லிக்குத் திரும்பும் போது பனி மூடிய பீர் பஞ்சல் மலைத்தொடரின் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் இந்தியாவின் கிரீடத்தில் இருக்கும் ஆபரணம் காஷ்மீர், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தயாராக உள்ளது. இந்தியாவின் இந்த அழகான பகுதிக்கு வருகை தரவும்" என்று #IncredileIndia’ எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்த அவரது பதிவில் கூறுகையில் "சீசனின் முதல் பனிப்பொழிவுக்குப் பிறகு, ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு நான் செல்லும் வழியில் பிர் பஞ்சால் மலைத்தொடரின் இந்த ஆச்சரியத்தக்க படங்களை படம் பிடித்தேன். இந்தியாவின் மணிமகுடத்தில் இருக்கும் ஆபரணமான காஷ்மீர், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தயாராக உள்ளது. இந்தியாவின் இந்த அழகான பகுதிக்குச் செல்லுங்கள். ," என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.