Published : 28 Oct 2021 03:06 AM
Last Updated : 28 Oct 2021 03:06 AM

2013-ல் நரேந்திர மோடி பொதுக்கூட்ட மைதானத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் 9 பேர் குற்றவாளிகள்: என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பாட்னா

கடந்த 2013-ம் ஆண்டு பாட்னாவில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2013-ல் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகு பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுவதற்கு முன், மைதானப் பகுதியில் 6 குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 90 பேர் காயம் அடைந்தனர். அருகில் உள்ள ரயில் நிலையத் திலும் குண்டு வெடித்தது. அங்கிருந்த வெடிக்காத 4 குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

குண்டுவெடிப்புக்கு பிறகு சுமார் 1 மணி நேரம் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு பாட்னாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இம்தியாஸ் அன்சாரி, பிளாக் பியூட்டி என்கிற ஹைதர் அலி, முகம்மது முஜிபுல்லா அன்சாரி உள்ளிட்ட 9 பேர் குற்றவாளிகள் என நீதிபதி குர்விந்தர் சிங் மல்ஹோத்ரா நேற்று தீர்ப்பளித்தார். போதிய ஆதாரங்கள் இல்லாததால் பக்ருதீன் என்பவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

நவம்பர் 1-ல் தண்டனை விவரம்

குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்ட 9 பேருக்கும் நவம்பர் 1-ம் தேதி தண்டனை விவரத்தை நீதிபதி மல்ஹோத்ரா அறிவிக்க உள்ளார்.

இதுகுறித்து என்ஐஏ வழக் கறிஞர் லாலன் சிங் கூறும்போது, “இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம், வெடிபொருட்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளார். குற்றவாளிகளில் பெரும்பாலானோர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். முன்னாள் இஸ்லாமிய மாணவர்இயக்கத்தின் செயற்பாட்டாளர் கள்” என்றார்.

வழக்கின் தீர்ப்பு நாள் கருதி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டனர். நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x