

ஆந்திரா, கர்நாடகா, தெலங் கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் காலியாக இருக்கும் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல்கள் நடக்கிறது.
மேலும் மத்திய பிரதேசம், தாத்ராநாகர் ஹவேலி, இமாச்சல பிரதேசத்தில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடக்கிறது. சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் 235 பேரின் வேட்பு மனுக்களை தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான ஜனநாய சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் போட்டி யிடும் 235 பேரில் 44 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் 36 பேர் தங்களுக்கு எதிராக தீவிரமான கிரிமினல் வழக்குகள் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளனர். 77 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.99 கோடி ஆகும்.
மூன்று மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 26 வேட்பாளர்களில் 4 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 7 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.4.97 கோடி என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.