கலவரத்தில் 3 பாஜகவினரை கொன்றதாக உ.பி.யில் விவசாயிகள் 2 பேர் கைது

கலவரத்தில் 3 பாஜகவினரை கொன்றதாக உ.பி.யில் விவசாயிகள் 2 பேர் கைது

Published on

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த 3-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவத்திலும் அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்திலும் 4 விவசாயிகள் மற்றும் பாஜகவினர், பத்திரிகையாளர் உட்பட 8 பேர் இறந்தனர். கலவரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

கலவரத்தின்போது விவசாயிகள் தாக்கியதில் பாஜகவினர் கொல்லப்பட்டது தொடர்பாக அமித் ஜெய்ஸ்வால் என்ற பாஜக பிரமுகர் போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், கலவரத்தில் பாஜகவினர் 3 பேரை கொன்றதாக விசித்ர சிங், குர்விந்தர் ஆகிய 2 விவசாயிகளை சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) போலீஸார் கைது செய்துள்ளனர். எஸ்ஐடி தலைவர் உபேந்திரா அகர்வால் கூறுகையில், ’’கலவரத்தில் பாஜகவினர் கொல்லப்பட்டதில் கைது செய்யப்பட்ட இரண்டு விவசாயிகளுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன’’ என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in