

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களின் ஆசியுடன் பல மாநிலங்களிலும் மத்தியிலும் பணியாற்றும் வாய்ப்பை பாஜக பெற்றுள்ளது. மக்களின் இந்த நம்பிக்கைக்கு ஒரு முக்கிய காரணம், கட்சி மற்றும் தேசக் கட்டமைப்புக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பல தலைமுறை தொண்டர்கள் ஆற்றிய முக்கிய பங்கு ஆகும்.
பிரதமர் மோடியின் நமோ செயலியில் ‘கமல் புஷ்ப்’ என்ற மிகவும் சுவாரஸ்யமான பகுதி உள்ளது. இது ஜனசங்க காலத்திலிருந்து இன்று வரை எங்கள் சித்தாந்தத்தை பிரபலப்படுத்த உழைத்த, உத்வேகம் அளிக்கும் கட்சித் தொண்டர்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. உங்களின் பங்களிப்பை செய்து இந்தப் பகுதியை வளப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.
பாஜக உறுப்பினர்களான உத்த ராகண்டின் பண்டிட் தேவேந்திர சாஸ்திரி, கர்நாடகாவின் மல்லிகார்ஜுனையா ஆகியோரை பற்றியும் பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். கட்சியை கட்டியெழுப்புவதில் அவர்களின் பங்களிப்பை பிரதமர் விளக்கியுள்ளார்.
நமோ செயலியை பயன்படுத்துவோர் பிரதமர் மோடியின் செய்திகளை உடனே பெறமுடியும் என்பதுடன் தங்கள் கருத்துகளையும் யோசனைகளையும் பிரதமருக்கு தெரிவிக்க முடியும்.