Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM

ஜெயலலிதாவின் தனிப்பட்ட உரிமைக்காகவே அறையில் சிசிடிவி கேமராக்களை அகற்றினோம்: உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் வாதம்

புதுடெல்லி

ஜெயலலிதாவின் தனிப்பட்ட உரிமையைக் கருத்தில் கொண்டுதான் அவர் சிகிச்சை பெற்ற அறையில் இருந்த சிசிடிவி கேமராக்களை, அதுவும் அதிகாரிகள் அகற்றச்சொன்னதால்தான் அகற்றினோம் என்று உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு 2019-ம் ஆண்டு முதல் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி ஆணையம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ண முராரி அமர்வில் இந்த வழக்கு விசாரணைநேற்று நடந்தது. அப்போது நடந்த வாதம்:

அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர் சி.ஆர்யமாசுந்தரம்: நாங்கள் ஆணையத்தைகலைக்க கோரவில்லை. ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் இடம்பெறவில்லை. எனவேதான்மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழுவை அமைக்க கோருகிறோம்.

தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே: ஏற்கெனவேஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆணையம் தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித்குமார்: இன்னும் 4சாட்சியங்களிடம் மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது. அவர்களையும் விசாரித்துவிட்டால் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

ஆர்யமா சுந்தரம்: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் மருத்துவ அறிக்கைரீதியாக விசாரணை மேற்கொள்ளவில்லை. அப்போலோவுக்கு வரும்முன்பாகவே ஜெயலலிதா இதய பாதிப்புக்காக மருந்து உட்கொண்டு வந்துள்ளார்.

நீதிபதிகள்: விசாரணை ஆணையத்தின் 90 சதவீத பணிகள் முடிந்ததாக கூறப்படும் நிலையில், இந்த வாதங்கள் அவசியமா?

ஆர்யமா சுந்தரம்: ஆணையத்தின் செயல்பாடுகள், பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இன்னும் பல அரசியல் தலைவர்களை விசாரிக்க வேண்டியுள்ளது. இது மருத்துவமனையின் நற்பெயர் சம்பந்தப்பட்ட விஷயம். அதற்கு களங்கம் ஏற்படும் என கருதினால் ஆரம்பத்திலேயே எதிர்க்க உரிமை உண்டு. முக்கியமான தலைவர்களை விசாரிக்காமல் எங்கள் மருத்துவர்களை மட்டும் தொடர்ந்து குற்ற மனப்பான்மையுடன் விசாரணைக்கு அழைக்க என்ன காரணம். ஜெயலலிதாவின் தனிப்பட்ட உரிமை முக்கியம் என்று கூறிஅதிகாரிகள் அகற்றக் கூறியதால்தான் அவர் தங்கியிருந்த அறை உள்ளிட்ட மருத்துவமனை வளாகத்தில் சிசிடிவி கேமராக்களை அகற்றினோம்.

இவ்வாறு வாதம் நடந்தது.

இதையடுத்து, தொடர் வாதத்துக்காக வழக்கு விசாரணையை நீதிபதிகள் இன்று தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x